Hyacinthesis Accelerator Cohort 1 இன் உற்பத்திகள் 2026 நவம்பர் 13 ஆம் திகதி தனிப்பட்ட

நிகழ்வுடனும், 2026 நவம்பர் 14 ஆம் திகதி Good Market இல் பொது மக்களுக்கான

நிகழ்வுடனும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும்.

● Cohort 2 இற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளல் 2026 நவம்பர் மாதம் ஆரம்பமாகும்.

கொழும்பு, இலங்கை, ஒக்டோபர் 2026 - Hyacinthesis Accelerator Cohort 1 வெற்றிகரமாக

நிறைவுபெற்றுள்ளது. இது வணிகரீதியாக சாத்தியமான Water Hyacinth தயாரிப்புகளை

உருவாக்குவதற்கும், இலங்கையின் சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி ஆற்றலை

வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது. இத்திட்டம் Scott Dunn, The Conservation

Collective மற்றும் LEF ஆகியவற்றின் ஆதரவுடன், Good Life X (GLX) இன் பங்களிப்புடன் The

Foundation For A Good Life (Guarantee) Limited (TFGL) இனால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

முதல் Cohort 1 இல் அங்கத்துவம் வகிக்கும் Ima Water Hyacinth (ஹம்பாந்தோட்டை), Sustain U

(பண்டாரகம), JJ Products (எஹேடுவெவ), Kumari Athkam (கல்கமுவ) மற்றும் Pradeepa Eco Products

(பிங்கிரிய) ஆகிய ஐந்து [05] உள்ளூர் தொழில்முயற்சிகள் தாங்கள் புதிதாக உருவாக்கிய

தயாரிப்புகளை இரண்டு நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தவுள்ளன. முதலாவதாக, 2026 நவம்பர் 13 ஆம்

திகதி, அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மட்டுமான சில்லறை வர்த்தகக் கண்காட்சியிலும், அதனைத்

தொடர்ந்து நவம்பர் 14 அன்று Good Market சந்தையில் பொதுமக்களுக்கான அறிமுக நிகழ்விலும் இத்

தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலதிக தற்காலிக

விற்பனைச் சந்தைகளும் (Pop-ups) நடத்தப்படவுள்ளன.

Hyacinthesis Accelerator Programme - Cohort 1 இன் திட்டத் தலைவர் லொனலி ரொட்ரிகோ கருத்துத்

தெரிவிக்கையில், “சுழற்சிப் பொருளாதாரம் என்பது கழிவாகப் போகக்கூடிய ஒரு பொருளுக்குப்

பயன்பாட்டைக் கண்டறிவது மட்டுமல்ல. மாறாக, அப்பொருளினூடாக, நிலையான மதிப்பினை

உருவாக்குவதற்கான சூழலையும் சாத்தியக்கூறுகளையும் ஏற்படுத்துவதாகும். Hyacinthesis திட்டத்தின்

ஊடாக, இக்கூறுகளை ஒன்றிணைத்து, சூழலியல் பொறுப்புணர்வானது ஏனோதானோவென்று

பார்க்கப்படாமல், மதிப்பு உருவாக்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாக மாறுவதை உறுதிசெய்ய நாம்

உழைக்கின்றோம்." எனக் குறிப்பிட்டார்.

Cohort 1 இல் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தொழில்முயற்சியும் ஆரம்பக்கட்ட தேவைகள் கண்டறியும்

பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டதுடன், அவற்றின் குறிப்பிட்ட வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி

செய்யும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட வணிக உருமாற்றத் திட்டமும் வகுக்கப்பட்டது. வணிகத்தின்

அடிப்படைகள், நிலைபேறுதன்மை மற்றும் சூழலியல் நடைமுறைகள், தயாரிப்பு வடிவமைப்பு, நிதி

முகாமைத்துவம், வர்த்தகமுத்திரை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளை உள்ளடக்கி ஆறு

பயிலரங்குகள் நடத்தப்பட்டன. மேலும், பங்கேற்பாளர்கள் வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்ப

வல்லுநர்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் சூழலியல் சுற்றுலாத் துறைச் சார்ந்த

கொள்வனவாளர்களுடன் இணைந்து பணியாற்றினர். இதன் மூலம் சந்தை வாய்ப்புகளுக்கான

வழிகளை அறிந்துகொண்டதுடன், தங்களது தொழில்சார் தொடர்புகளையும் வலுப்படுத்திக்

கொண்டனர்.

Hyacinthesis Accelerator Programme இன் வணிக மற்றும் தொழினுட்ப நிபுணரான பிரபுத்த பட்டுவத்த

குறிப்பிடுகையில், “பொருள் புத்தாக்கத்தை தொழில்முயற்சிகளின் கொள்ளளவு விருத்தி மற்றும் சந்தைத்

தேவைகளுடன் இணைப்பதன் மூலம், Hyacinthesis Accelerator திட்டம், இலங்கையில் பொருளாதார

ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் நிலைபேறான மதிப்புத் தொடருக்கான அடித்தளத்தைக்

கட்டியெழுப்பி வருகின்றது. இத் திட்டம் பொறுப்புணர்வுமிக்க வளப் பயன்பாட்டை, வணிக

வாய்ப்புகள் மற்றும் நிலைபேறான வாழ்வாதாரங்களுடன் ஒருங்கிணைக்கும் அமைப்பாகச்

செயல்படுகின்றது.” என்றார்.

மேலதிக திட்டத் தகவல்கள் மற்றும் விண்ணப்பம் தொடர்பான அறிவிப்புகளை Good Life X இன் சமூக

ஊடகக் கணக்குகள் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

Cohort 1 சந்தையை நோக்கி நகரும் வேளையில், Cohort 2 இற்கான விண்ணப்பக் கோரல் 2026

நவம்பர் மாதத்தில் ஆரம்பமாகும். Biochar, Biofertilisers, Paper and packaging, Plastic alternatives

அல்லது Innovative materials போன்ற துறைகளில் water hyacinth ஐ பயன்படுத்தி தயாரிப்புகள்

அல்லது தீர்வுகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட அல்லது தற்போது அத்துறையில் ஈடுபட்டுள்ள

தொழில்முயற்சிகள் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகின்றன.