கொழும்பு, இலங்கை, மார்ச் 2026 – “நாம் முன்னெடுக்கும் பாதைகள்” (TRWT) திட்டம், EUNIC ஸ்ரீ லங்காவுடனான தனது பல ஆண்டுகால கூட்டுப்பங்குதாரர் கட்டத்தை 2025 ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவு செய்தது. இனிவரும் காலங்களில் இத்திட்டம், Good Life X நிறுவனத்தின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இலங்கையின் படைப்பாற்றல் துறையில் நிலைபேறான புத்தாக்கங்களையும், பிராந்தியங்களுக்கிடையிலான ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதில் TRWT தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.
2024 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட “Digital Creative Green Map” தற்போது 210 இற்கும் மேற்பட்ட பதிவுகளைக் கொண்டுள்ளது. இது காட்சிப் புலக் கலைகள், செயற்பாடுகள், வடிவமைப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல்துறைசார் நடைமுறைகளில் ஈடுபடும் படைப்பாளிகளின் திறமைகளை வெளிப்படுத்துகின்றது. அத்துடன், மத்திய மாகாணம் (கண்டி), வடக்கு மாகாணம் (யாழ்ப்பாணம்), கிழக்கு மாகாணம் (மட்டக்களப்பு) மற்றும் தென் மாகாணம் (அஹங்கம) ஆகியவற்றை உள்ளடக்கிய TRWT திட்டத்தின் பல பிராந்திய விரிவாக்கம், அப் பகுதிகளில் சிறிய அளவிலான கூட்டுச் சமூகங்கள் உருவாக வழிவகுத்துள்ளது.
Good Life X இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும், TRWT செயற்திட்ட பணிப்பாளருமான எம்மா டி சில்வா உடன் உரையாற்றுகையில், “இலங்கையின் பாரம்பரியக் வடிவமைப்புத்திறன் மற்றும் வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் கலாசாரப் பாரம்பரியங்கள் ஆழமாக வேரூன்றியிருந்த போதிலும், நிலைபேறாண்மை கொண்ட படைப்பாற்றல் நடைமுறைகள் போதியளவு அங்கீகரிக்கப்படுவதில்லை. இதனை உணர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்வதில் படைப்பாற்றல் தொழில்துறைகள் கொண்டுள்ள வளர்ந்து வரும் முக்கியத்துவத்திற்குப் பதிலளிக்கும் வகையில் TRWT ஆரம்பிக்கப்பட்டது.” என்றார்.
2025 ஆம் ஆண்டு முழுவதிலும், இந்த செயற்திட்டத்தினூடாக கண்காட்சிகள், உரையாடல்கள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் போன்றன முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அவை பிராந்தியங்களுக்கிடையிலான ஒன்றிணைந்த செயற்பாடுகளை வலிமைப்படுத்தி, கொழும்புக்கு அப்பால் படைப்பாற்றல் திறனை நிலைபேறான பொருளாதாரத்துடன் இணைக்கும் கட்டமைப்புகளுக்கு காணப்படும் கேள்வியையும் வெளிப்படுத்தியிருந்தது. தென் மாகாணத்தில், படைப்பாற்றல்கள் மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கிடையிலான கைகோர்ப்பினூடாக, சமூகத்தில் காணப்படும் சுற்றுலா அபிவிருத்தியில் புதிய வாய்ப்புகளை வெளிப்படுத்தியிருந்தன.
எம்மா டி சில்வா நிறைவாக குறிப்பிடுகையில், “தென் மாகாணத்தில் குறிப்பிடத்தக்களவு வெற்றி எய்தப்பட்டுள்ளது. அங்குள்ள படைப்பாற்றல் நடைமுறைகளை சுற்றுலாத்துறையுடன் இணைப்பதன் மூலம், சமூகம் சார்ந்த மற்றும் நிலைபேறாண்மையான சுற்றுலா அனுபவங்களுக்கான புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன.” என்றார்.
கண்டி ஈடுபாட்டு நிகழ்வில் முதலில் தமது ஆக்கத்தை வெளிப்படுத்தி, யாழ்ப்பாண ஈடுபாட்டு நிகழ்விலும் பங்கேற்றிருந்த, கண்டியைச் சேர்ந்த பல்திறன் படைத்த கலைஞரான மஹேஷா காரியப்பெரும தமது அனுபவத்தை பகிர்ந்து கொள்கையில், “கண்டியில் நிலவிவந்த தேக்கமடைந்த கலாசாரச் சூழல் காரணமாக, அங்கு ஒரு கண்காட்சியை நடாத்த வேண்டுமென நான் பெரிதும் விரும்பினேன். TRWT திட்டத்தின் ஊடாக, முதல் முறையாக எமது சொந்த ஊரிலேயே கண்காட்சியை நடாத்த முடிந்ததுடன், அதன் விளைவாக கண்டியில் எமக்கென ஒரு கலைஞர்கள் கூட்டமைப்பை உருவாக்கவும் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தமை, அங்கிருக்கும் கலைஞர்களிடமிருந்து நவீன மற்றும் கலாசார ரீதியான கலை மற்றும் வடிவமைப்புக்களைக் கற்றுக்கொள்ளவும், எமது கலாச்சார ஒற்றுமைகளை நேரில் கண்டறியவும் எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது.” என்றார்.
Alliance Française, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதரகம், Goethe-Institute, பிரிட்டிஷ் கவுன்சில், சுவிஸ் தூதரகம், நெதர்லாந்து தூதரகம் மற்றும் இத்தாலி தூதரகம் ஆகியவற்றை உள்ளடக்கிய EUNIC ஸ்ரீ லங்கா அமைப்பினால், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் ஆதரவுடன் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Good Life X (Pvt) Ltd நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் TRWT திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்வதில் படைப்பாற்றல் தொழில்துறைகள் கொண்டுள்ள வளர்ந்து வரும் முக்கியத்துவத்திற்குப் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாரம்பரியக் கைவினைத்திறன் மற்றும் கலாசார நடைமுறைகளில் நிலைபேறாண்மை மற்றும் சுழற்சி பொருளாதாரக் கோட்பாடுகள் ஆழமாக வேரூன்றியிருந்த போதிலும், அவை பெரும்பாலும் முறையான படைப்பாற்றல் மற்றும் பொருளாதாரப் பிரிவுகளில் போதிய அங்கீகாரத்தைப் பெறுவதில்லை.
2025 இல், இத்திட்டமானது Beyond Rhizome: Artistic Exploration (கண்டி), Yarl IT Hub, Olai மற்றும் Sri Lanka Archive of Contemporary Art, Architecture & Design (யாழ்ப்பாணம்), Dreamspace Academy (மட்டக்களப்பு) மற்றும் Sarana Sri Lanka (அஹங்கம) ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், Good Life X நிறுவனம் அனைத்து பிராந்தியங்களுக்குமிடையிலான திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் மூலோபாய மேற்பார்வையை வழங்கியது.
இறுதியாக, இத்திட்டத்தின் ஒரு நிலையான அடையாளமாக, பொதுமக்களினால் அணுகக்கூடிய Creative Green Map வழங்கப்பட்டுள்ளது. இது புதிய பதிவுகளை உள்ளடக்குவதற்காகத் தொடர்ந்தும் திறந்திருக்கும் அதேவேளை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு வீடியோ தொகுப்புகளையும் இத்திட்டம் கொண்டுள்ளது. (பொது மக்களுக்கான பாவனைக்காக TRWT இணையத்தளத்தை https://therouteswetake.com/ இல் பார்வையிடலாம்).
About GLX
Good Life X (GLX) designs regenerative solutions for South Asia’s transition from extractive to regenerative economies. Since 2018, the organisation has partnered with over 200 businesses across multiple sectors to create strategies where profit and purpose aren’t trade-offs. Through programmes, frameworks, and cross-sector collaboration, GLX guides businesses to operate in ways that restore rather than extract
About EUNIC
EUNIC – European Union National Institutes for Culture – is Europe’s network of national cultural institutes and organisations, with 36 members from all EU Member States and associate countries. EUNIC Sri Lanka – consisting of Alliance Française and the Embassy of France in Sri Lanka and the Maldives, Goethe-Institut, British Council, Swiss Embassy, Embassy of the Kingdom of the Netherlands and Embassy of Italy, with the support of the EU Delegation, adopts an integrated approach to building cultural relations and creative collaborations and supporting diversity.
