22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

வீதிப் பாதுகாப்பு தொடர்பில் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை விஸ்தரித்த ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம் பாதுகாப்பான வீதிக்
கட்டமைப்புக்கான நீண்டகால ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது
கவனயீனமான முறையில் வாகனங்களைச் செலுத்துதல், அதிக வேகம், ஆபத்தான முறையில்
வாகனத்தை ஓட்டுதல், சாரதிகள் மாத்திரமன்றி பாதசாரிகளின் கவனயீனம் காணமாக
இடம்பெறுகின்ற வீதி விபத்துக்கள் மற்றும் உயிராபத்துக்கள் அதிகரித்திருப்பதன் காரணமாக
இலங்கையில் வீதிப் பாதுகாப்பென்பது தேசிய மட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியதொரு
விடயமாக மாறியுள்ளது. புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இந்த
நிலைமையின் தீவிரத் தன்மை தெளிவாகின்றது. இலங்கை பொலிஸின் தகவல்களுக்கு அமைய
2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் 3,642 ற்கும் அதிகமான வீதி
விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 405 வீதி விபத்துக்கள் உயிரிழப்பை ஏற்படுத்தியதன்
விளைவாக 422 பேர் உயிரிழந்தனர்.
2025ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,732 பேர்
உயிரிழந்திருப்பதுடன், அவர்களில் பெரும்பாலானோர் பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்
ஓட்டுனர்களாவர். 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் புள்ளிவிபரங்களில் சிறிய
அதிகரிப்பைக் காண்பித்தாலும், கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அதிகரிப்பு,
ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதாரச் செலவையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக வீதிப்
பாதுகாப்பு ஒரு அத்தியாவசியமான தேசிய முன்னுரிமையாக மாறியுள்ளது.
நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘2026 தேசிய வீதிப் பாதுகாப்பு வாரத்தை”
முன்னிட்டு, ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம், ரன் எஃப்எம் உடன்
இணைந்து, மே 18 ஆம் திகதி பொரள்ளையில் வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு
நிகழ்ச்சியொன்றை முன்னெடுத்திருந்தது. வீதிகளைப் பொறுப்பான முறையில் பயன்படுத்துவது
மற்றும் வீதி விபத்துக்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை வாகனச் சாரதிகள் மற்றும்
பாதசாரதிகளுக்கு உணர்த்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக அமைந்தது.
பொரள்ளையில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியானது நாடு முழுவதிலும் நீண்டகாலமாக
முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக அமைந்ததுடன், ஸ்ரீலங்கா
இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தினால் சம்பந்தப்பட்ட தரப்பினர், சமூகங்கள்
மற்றும் வீதிகளைப் பயன்படுத்தும் பல்வேறு தரப்பினரை இணைத்து வீதிப் பாதுகாப்புத்
தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தனது முதன்மைத் திட்டமான Motor Plus காப்புறுதித் திட்டத்தின் ஊடாக இலங்கையின் வாகனக்
காப்புறுதித் துறையில் சந்தை முன்னணியாளராகத் திகழும் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ்
கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம், வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதை
காப்புறுதிதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆற்ற வேண்டிய பொறுப்பின் ஒரு முக்கியப்
பகுதியாக உறுதியாக நம்புகிறது.

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தினால் மற்றும் ரன் எஃப்.எம்
ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியானது வீதிப் பாதுகாப்பு என்பது ஒரு
பொதுவான கூட்டுப் பொறுப்பு என்பதையும், வீதிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அதில்
கவனம் செலுத்தி அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்பதையும் வலியுறுத்தும்
சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்பாகும். இந்நிகழ்ச்சியில் வாகனச் சாரதிகள், பாடசாலை
மாணவர்கள், பாதசாரிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் எனப்
பலதரப்பினரும் பங்கேற்றனர். மேலும், விழிப்புணர்வு நடவடிக்கைகள், கல்விசார் அறிவு மற்றும்
ஒரு பொதுத் தொடர்புத் திட்டம் ஆகியவற்றின் மூலம் வீதிப் பாதுகாப்புத் தொடர்பில்
அவர்களுக்குத் தேவையான விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல், பாதுகாப்பான வேகக் கட்டுப்பாடுகளைக்
கடைப்பிடித்தல், வாகனங்களைச் செலுத்தும்போது கையடக்கத்தொலைபேசிப் பயன்பாட்டைத்
தவிர்த்தல், ஆசனப் பட்டிகளை முறையாக அணிதல் மற்றும் வாகனங்களைச் செலுத்தும்போது
பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வாகனச்
சாரதிகளுக்கு நினைவூட்டப்பட்டது. மேலும், விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைக்க
உதவும் வகையில், பாதசாரிகள் மற்றும் வீதியைப் பயன்படுத்தும் ஏனையவர்கள் மீது
விழிப்புடனும் அக்கறையுடனும் இருக்குமாறு வாகனச் சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அத்துடன், பாதசாரிகள் வீதிகளைக் கடப்பதற்கு கடவைகளைப் பயன்படுத்தவும், போக்குவரத்து
சமிக்ஞைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கும், வீதியில் நடக்கும்போது எப்போதும் விழிப்புடன்
இருக்கவும் கடுமையாக வலியுறுத்தப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழல்களில்
மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களான பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியோர்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
ரன் எஃப்எம் ஊடகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம் நாடு முழுவதும்
உள்ள மக்களுக்கு வீதிப் பாதுகாப்புக் குறித்த செய்தியைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக
அமைந்தது.
இந்தப் புதிய முன்னெடுப்பு நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு பகுதி என்பதுடன், நாடு முழுவதும்
பாதுகாப்பான வீதிப் பயன்பாடு குறித்த கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில், பல
ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ள நீண்டகாலத் திட்டங்களின் வரிசையின்
முதற்படியாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தினால்
ஆரம்பிக்கப்பட்ட “நான் ஓர் பாதுகாப்பான சாரதி” (I Am a Safe Driver) என்ற திட்டம்
சாரதிகளுக்குப் பொறுப்பான பழக்கவழக்கங்களையும், குறிப்பாகப் பாடசாலைப் போக்குவரத்துத்
துறையில் சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள
ஆயிரக்கணக்கான பாடசாலை போக்குவரத்து சேவை வழங்குனர்களை
ஒன்றிணைத்திருப்பதுடன், பாடசாலைப் போக்குவரத்து சேவைகளின் பாதுகாப்பிலும் கவனம்
செலுத்தியது. மேலும் வீதிகளைப் பயன்படுத்தும் ஏனைய தரப்பினரிடையே வீதிப் பாதுகாப்புக்
குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு துண்டுப் பிரசுர விநியோகம், ஸ்டிக்கர்கள் மற்றும்
வாகன டக்ஸ் (Vehicle tags) போன்ற நடைமுறைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்தத் திட்டங்களின் மூலம் விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் ஒருங்கிணைத்து,
எஸ்.எல்.ஐ.சி ஜெனரல் நிறுவனம் இலங்கையின் முன்னணி காப்பீட்டு நிறுவனமாகச்
செயல்படுவது மட்டுமல்லாமல், நாட்டின் சாலைகளில் உயிர்களைப் பாதுகாப்பதில் ஒரு
செயல்திறன் மிக்க பங்காளராகவும் விளங்குகிறது.
மிக முக்கியமாக ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம் இந்தக் கூட்டு
ஒத்துழைப்பின் மூலம் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்கின்றது என்பதற்கு அப்பால்,
தொடர்ச்சியான பொறுப்புக்கூறலுடன் பாதுகாப்பான நடைமுறைகளை மேலும் உறுதி
செய்வதற்காகப் பாடசாலைப் போக்குவரத்து சேவை வழங்குனர்களுடன் நீடித்த உறவை
ஏற்படுத்தியது.
ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தின் வீதிப் பாதுகாப்புத்
திட்டமானது, வீதியைப் பாதுகாப்பான முறையில் பயன்பாட்டை நோக்கி சமூகங்களை
வழிநடத்துவதில் அந்நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
மேலும், இது இலங்கையின் முதன்மை வாகனக் காப்புறுதி நிறுவுனம் என்ற அதன் நிலையை
வலுப்படுத்துவதுடன், தேசிய அபிவிருத்திக்கு கணிசமாகப் பங்களிப்பதையும், நீண்டகால சமூகத்
தாக்கத்தை உருவாக்குவதையும் எடுத்துக்காட்டுகிறது.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz