ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (SLICGL) செயற்கைத்
தொழில்நுட்பத்திலான இலங்கையின் முதன் முதலாவது மும்மொழி காப்புறுதி
உதவியாளரான‘Beechat’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது இலங்கையின் காப்புறுதித் துறையில்
முக்கியதொரு சாதனையாகவும், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட சேவைகளை நோக்கிய
நிறுவனத்தின் முன்னேற்றப் பாதனையின் சாதனையாகவும் அமைந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் அனுபவத்தை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் Beechat
வடிவமைக்கப்பட்டுள்ளது. SLICGL இன் இணையத்தளம் ( https://www.slicgeneral.com/ ) மற்றும்
வாடிக்கையாளர் இணையத் தளம் (Customer Portal) ஆகியவற்றின் ஊடாக இதனைப்
பயன்படுத்த முடியும் என்பதுடன், இந்த உதவியாளர், வாரத்தில் ஏழு நாட்களும், நாளொன்றுக்கு
24 மணிநேரமும், காப்புறுதித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள், நிகழ்நேர இழப்பீட்டு
கோரிக்கைகளின் நிலைமை, மற்றும் காப்புறுதி தொடர்பான உதவிகளை உடனுக்குடன்
வழங்குகிறது.
Beechat ஆனது வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதி சேவையை எளிமையாகவும் எப்போதும்
அணுகக்கூடியதாகவும் மாற்றுகிறது. நீண்ட வரிசைகளில் காத்திருப்பது, தொலைபேசி உதவி
மையங்களைத் தொடர்புகொள்வது அல்லது அலுவலக நேரத்தை நம்பியிருப்பது போன்ற
தேவைகள் இன்றி, வாடிக்கையாளர்கள் தங்களது காப்புறுதித் திட்டங்களை சரிபார்த்துக்
கொள்வதற்கும், இழப்பீட்டு கோரிக்கைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், இவை
தொடர்பில் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் உடனடி பதில்களையும்
பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம், மொழி வேறுபாடின்றி அனைத்து வாடிக்கையாளர்களும்
தங்களது காப்புறுதி சேவைகளை எளிதாக நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பெறுகின்றனர்.
இந்த மும்மொழி வசதி, வாடிக்கையாளர்களின் மொழித் தேர்வு எதுவாக இருந்தாலும், அவர்கள்
தடையின்றி காப்புறுதி சேவைகளைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. செயற்கை
நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் இந்த தளம், சேவைச் சிக்கல்களைக் குறைத்து,
தாமதங்களை நீக்கி, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. இதன்
மூலம், மந்தமானதும் சிக்கலானதுமான செயல்முறையாகக் கருதப்பட்ட காப்புறுதி சேவை, நவீன
வாழ்க்கை முறைக்கு ஏற்ற எளிய, விரைவான டிஜிட்டல் அனுபவமாக மாற்றப்படுகிறது.
SLICGL நிறுவனத்தின் Beechat இன் அறிமுகமானது, நிறுவனத்தின் மூலோபாய நோக்கில்
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது, இலங்கையின் காப்புறுதி துறையில் புதுமை மற்றும்
தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியாகத் திகழும் SLICGL நிறுவனத்தின் நிலையை
மேலும் உறுதிப்படுத்துகிறது. நாட்டின் முதல் முதலில் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு
அடிப்படையிலான, மும்மொழி காப்புறுதி உதவியாளரை அறிமுகப்படுத்துவதன் மூலம்,
டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான சிறந்த வாடிக்கையாளர்
சேவைக்கான தனது உறுதிப்பாட்டை SLICGL நிறுவனம் வெளிப்படுத்துகிறது.
இந்த முயற்சியானது நிறுவனத்தை எதிர்கால நோக்குடன் செயல்படும், வாடிக்கையாளர்களை
மையமாகக் கொண்ட நிறுவனமாக மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, இன்னும் பாரம்பரிய
சேவை முறைகளைப் பின்பற்றும் போட்டியாளர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது. மேலும்,
அணுகல் வசதி, செயல்திறன் மற்றும் சேவை எளிமை ஆகியவற்றில் புதிய தரங்களை நிறுவும்
நிறுவனமாக SLICGL நிறுவனம் விளங்குகிறது என்பதை காப்புறுதி துறையினருக்கும் பிற
பங்குதாரர்களுக்கும் இதன் அறிமுகம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாடிக்கையாளர் ஈடுபாட்டில் முன்னோடியாகத் திகழும் SLICGL,
இந்த முயற்சியின் மூலம் காப்புறுதி துறைக்கு புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது. Beechat,
பாரம்பரிய காப்புறுதி சேவையை தொழில்நுட்பத்தின் சக்தியால் நவீனமான, எதிர்காலத்தை
நோக்கிய டிஜிட்டல் அனுபவமாக மாற்றுவதோடு, SLICGL மற்றும் அதன்
வாடிக்கையாளர்களுக்கிடையிலான உறவையும் மேலும் வலுப்படுத்துகிறது.