අද කාලගුණය 2024.11.29
නිරිත දිග බෙංගාල බොක්ක ප්රදේශයේ ප්රබල පීඩන අවපාතයක් ඊයේ රාත්රී 11.30 ට ත්රිකුණාමලයට ඊසාන දෙසින් කිලෝමීටර් 240 ක් සහ කන්ගේසන්තුරේ සිට කිලෝමීටර් 290 ක් පමණ දුරින් ස්ථානගත වී ඇත. එය උතුරු-වයඹ දෙසින් තමිල්නාඩු වෙරළ දෙසට ගමන් කරයි.
අද සිට රටේ කාලගුණයට ඇති බලපෑම ක්රමයෙන් අඩුවනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
උතුරු සහ උතුරු මැද පළාත්වල මෙන්ම ත්රිකුණාමලය දිස්ත්රික්කයේ ද නිතර වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.
උතුරු පළාතේ ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 100 දක්වා තද වැසි ඇති විය හැක.
සබරගමුව, ඉහළ සහ වයඹ පළාත්වලට මෙන්ම ගාල්ල, මාතර, මාතල සහ මහනුවර දිස්ත්රික්කවලට නිතර වැසි ඇති විය හැක.
දිවයිනේ සෙසු ප්රදේශවල බොහෝ ප්රදේශවල සවස් කාලයේ හෝ රාත්රී කාලයේ වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.
උතුරු, නැගෙනහිර, උතුරු මැද, මධ්යම වයඹ සහ දකුණු පළාත්වල නිතර නිතර පැයට කිලෝමීටර් 60 දක්වා තද සුළං ඇති විය හැක.
තද සුළං සහ අකුණු මඟින් සිදුවන අනතුරුවලින් අලාභ හානි හෝ හානි වළක්වා ගනිමින් ප්රවේශම් වන ලෙස මහජනතාවට දැනුම් දෙනු ලැබේ.
මුහුදු කලාපවල
පුත්තලම සිට කාංගසන්තුරය, ත්රිකුණාමලය සිට මඩකලපුව දක්වා ගැඹුරු සහ නොගැඹුරු මුහුදු ප්රදේශවලට නැවත දැනුම් දෙන තුරු නොයන ලෙස ධීවරයින්ට සහ නාවික සේවකයන්ට දැනුම් දෙනවා.
දිවයින අවට අනෙකුත් මුහුදු ප්රදේශවලට යන අයගෙන්ද දැඩි අවධානයෙන් කටයුතු කරන ලෙස ඉල්ලා සිටියි.
රට වටා ඇති වෙරළබඩ ප්රදේශවල නිතර වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.
දිවයින වටා වන මුහුදු ප්රදේශවල සුළං වයඹ දෙසින් පැයට කිලෝමීටර් 40 – 50 ක වේගයෙන් හමා යනු ඇත.
පුත්තලම සිට මඩකලපුව හරහා ත්රිකුණාමලය, කන්ගේසන්තුරය දක්වා වන ප්රදේශවල සුළගේ වේගය විටින් විට පැයට කිලෝමීටර් 60 – 70 දක්වා වැඩි විය හැක. එවැනි අවස්ථාවලදී මෙම මුහුදු ප්රදේශ ඉතා කැළඹිලි ස්වභාවයක් දක්නට ලැබේ.
රට වටා ඇති අනෙකුත් මුහුදු ප්රදේශවල විටින් විට තරමක් කැළඹිලි ස්වභාවයක් ඇති වේ.
இன்றைய வானிலை
2024.11.29
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 240 km தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 290km தொலைவிலும் நேற்று இரவு 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது வடக்கு – வடமேற்குத் திசையையினூடாக தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்கின்றது.
நாட்டின் வானிலையில் காணப்படுகின்ற தாக்கமானது இன்று முதல் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் பெய்யக்கூடும்.
வட மாகாணத்தின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 60 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 km வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
கலாநிதி மொஹமட் சாலிஹீன்.