சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் 400 மாற்றுத்திறனாளிகளுக்கான கெளரவிப்பும் பரிசுப் பொருட்களும் வழங்கிவைக்கும் நிகழ்வும் இன்று (03/12) சிறப்பாக நடந்தேறியது.
இந் நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை திணைக்களம் ஏற்பாடுசெய்து, நிகழ்வின் தலைவராக மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட தலைவர் திரு S.அருள்ராஜ் வழிநடாத்தினார்.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் திருமதி JJ.முரளீதரன், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் பொறியியலாளர் N.சிவலிங்கம், விசேட அதிதியாக சமுக சேவை திணைக்கள மாகாண பணிப்பாளர் திரு K.இளங்குமதன் ஆகியோரது பங்குபற்றுதலுடன், மாவட்ட சமூக சேவை திணைக்கள அதிகாரிகளான திரு S.அருள்மொழி, திரு AMM. அலியார், திருமதி C.கோணேஸ்வரன் ஆகியோருடன் விசேட அழைப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட CAFFE அமைப்பின் பணிப்பாளர் திரு ALM மீராசாஹிப் ,CAFFE அமைப்பின் இணைப்பாளரும், மரண விசாரணை அதிகாரியுமான திரு MSM. நஸீர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள மாற்றுத்திறனாளிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பல்வேறு சிறப்பான கலை நிகழ்ச்சிகளை நடாத்தி அரங்கை அதிரவைத்தனர்.
இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்காக CAFFE அமைப்பின் அனுசரணையாக 40 பேருக்கான பரிசுப்பொருட்களும் மற்றும் இன்னும் 40 பேருக்கான பரிசுப்பொருட்கள் சென் அம்பியுலன்ஸ் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ALM.மீராஸாகிப் அவர்களது அனுசரணையிலும் வழங்கிவைக்கப்பட்டது.
