අද (දෙසැම්බර් 19) දිනය
අඩු පීඩන කලාපය පිහිටා ඇත්තේ බෙංගාල බොක්කෙහි නිරිතදිග කොටසේ ය. එය ඉදිරි දින දෙක තුළ සෙල්වම් සමඟ බටහිර-වයඹ දෙසට ගමන් කර උතුරු තමිල්නාඩුව සහ දකුණු ආන්ද්ර වෙරළ තීරය හරහා ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
එබැවින් බෙංගාල බොක්ක ආශ්රිත මුහුදු ප්රදේශවලට පැමිණෙන ධීවරයින් සහ සමුද්ර සේවකයින් ප්රවේශමෙන් සමුද්රීය කටයුතුවල නිරත වන ලෙස ඉල්ලා සිටියි.
උතුර, වයඹ සහ බස්නාහිර පළාත්වලට මෙන්ම ගාල්ල සහ මාතර දිස්ත්රික්කවලට කඩින් කඩ වැසි ඇති විය හැක.
මධ්යම සහ ඌව පළාත්වල බොහෝ ස්ථානවල සවස් කාලයේ හෝ රාත්රී කාලයේ වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.
උතුරු, උතුරුමැද, මධ්යම, සබරගමුව සහ නැගෙනහිර පළාත්වල සමහර ප්රදේශවලට උදෑසන කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් දක්නට ලැබේ.
තද සුළං සහ අකුණු අනතුරු ඇති විය හැකි අවස්ථාවලදී ප්රවේසම් වන ලෙස මහජනතාවට දැනුම් දෙනවා.
இன்றைய வானிலை 2024.12.19
தாழ் அமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி மேலும் நகர்ந்து செல்வத்துடன் அடுத்த இரு நாட்களில் தமிழ் நாட்டின் வட பகுதிக்கும் தென் ஆந்திர கரைக்கும் இடையாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையினால் வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து அல்லது மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 – 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.