கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.நஸீர் தனது 60 வயதை பூர்த்தி செய்து இன்றுடன் (12) ஓய்வு பெற்றார்.
இவர் கிழக்கு மாகாண விவசாய, கூட்டுறவு அமைச்சின் செயலாளராகவும், பேரவைச் செயலக செயலாளராகவும், பிரதி பிரதம செயலாளர் (நிருவாகம்) இறக்காமம் ,அட்டாளச்சேனை,கல்முனை பிரதேச செயலாளர், போன்ற பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்கது.