கல்முனை ஸாஹிறா கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதனை தொடர்ந்து மறுவா இல்லத்தின் மேலங்கி மற்றும் இல்லத்திற்கான பாடல் தொகுப்பு என்பன உத்தியாகபூர்வமாக இல்லத்தின் தலைமை பொறுப்பாசிரியர் TS.அஜ்மல் ஹுசைன் அவர்களின் தலைமையில் இன்று (14) கல்முனை ஸாஹிறா கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை ஸாஹிறா கல்லூரியின் அதிபர் MI.ஜாபிர் (SLEAS) அவர்கள் மற்றும் விஷேட அதிதியாக Happy Home Furniture உரிமையாளரும் மறுவா இல்லத்தின் பழைய மாணவருமான MHM.ஜேம்ஷாத் அவர்களும் கலந்து கொண்டதோடு. இல்லத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இல்லத்திற்கான உத்தியோகபூர்வ பாடல் தொகுப்பு ஹாஜி ஹோட்டல் உரிமையாளரும் இல்லத்தின் பழைய மாணவருமான Mr.அக்பர் அவர்களினால் இயற்றப்பட்டது. மேலும் இந் நிகழ்வில் வரவேற்புரை இல்லத்தின் தலைமை பொறுப்பாசிரியர் TS.அஜ்மல் ஹுசைன் அவர்களினால் உரையாற்றப்பட்டதுடன் பிரதம அதிதி உரை அதிபர் MI.ஜாபிர் (SLEAS)அவர்களால் நிகழ்த்தப்பட்டதுடன் இல்லத்தின் உத்தியாகபூர்வ மேலங்கி மற்றும் இல்லத்திற்கான பாடல் தொகுப்பு அதிதிகளினால் வெளியிடப்பட்டது இதனை தொடர்ந்து அதிதிகள் மற்றும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு மேலங்கி வழங்கி வைக்கப்பட்டதுடன் இல்லத்திற்கான குழு புகைப்படமும் எடுக்கப்பட்டது மேலும் இறுதி நிகழ்வாக நன்றி உரையினை இல்லத்தின் ஆசிரியர் மௌலவி MARM.றிஸ்ஹான் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.