2025 ජුලි මස 22 දින ප.ව. 2.00 ට නිකුත්කරන ලදී.බස්නාහිර, සබරගමුව සහ මධ්යම පළාත්වලත් ගාල්ල සහ මාතර දිස්ත්රික්කවලත් විටින් විට වැසි ඇතිවේ. බස්නාහිර සහ සබරගමුව පළාත්වලත් නුවරඑළිය, මහනුවර, ගාල්ල සහ මාතර දිස්ත්රික්කවලත් ඇතැම් ස්ථානවල මි.මී. 75 ක පමණ තරමක තද වැසි ඇතිවිය හැක.
වයඹ පළාතේත් හම්බන්තොට දිස්ත්රික්කයේත් වැසි වාර කිහිපයක් ඇතිවිය හැක.
මධ්යම කඳුකරයේ බටහිර බැවුම් ප්රදේශවලත් උතුරු, උතුරු-මැද සහ මධ්යම පළාත්වලත්, ත්රිකුණාමලය සහ හම්බන්තොට දිස්ත්රික්කවලත් විටින් විට හමන පැ.කි.මී. (55-60) ක පමණ තද සුළං ඇතිවිය හැක. දිවයිනේ සෙසු ප්රදේශවල විටින් විට හමන පැ.කි.මී. (40-50) ක පමණ තරමක තද සුළං ඇතිවිය හැක.
තද සුළං වලින් සිදු වන අනතුරු අවම කර ගැනීමට අවශ්ය පියවර ගන්නා ලෙස ජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිනු ලැබේ.
2025 ஜூலை 23ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூலை 22ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பலத்த காற்றின் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
WEATHER FORECAST FOR 23 JULY 2025
Issued at 2.00 p.m. on 22 July 2025
Showers will occur at times in the Western, Sabaragamuwa and Central provinces and in Galle and Matara districts. Fairly heavy falls about 75 mm are likely at some places in the Western and Sabaragamuwa provinces and in Nuwara-Eliya, Kandy, Galle and Matara districts.
Several spells of showers may occur in the North-western province and in Hambantota district.
Strong winds of about (55-60) kmph can be expected at times over Western slopes of the central hills and in Northern, North-central and Central provinces and Trincomalee and Hambanthota districts. Fairly strong winds about (40-50) kmph can be expected at times elsewhere.
The general public is kindly requested to take adequate precautions to minimize damages caused by strong winds.
