Today’s weather forecast

උතුර, නැගෙනහිර, ඌව, මධ්‍යම සහ දකුණු පළාත්වලට අද සහ හෙට වර්ෂාවේ වැඩි වීමක් දක්නට ලැබේ. දිවයිනේ බොහෝ ප්‍රදේශ වළාකුළු පිරි අහසකින් වට වනු ඇත. උතුරු, නැගෙනහිර, ඌව, මධ්‍යම සහ දකුණු පළාත්වලට මෙන්ම පොළනරුයි දිස්ත්‍රික්කයට නිතර වැසි ඇති විය හැක. අනුරාධපුර දිස්ත්‍රික්කයට කඩින් කඩ වැසි ඇති විය හැක.

දිවයිනේ සෙසු ප්‍රදේශවල බොහෝ ප්‍රදේශවල සවස 1 න් පසු වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක. සබරගමුව සහ බස්නාහිර පළාත්වලට උදය කාලයේදී ද වැසි ඇති විය හැක. නැගෙනහිර සහ ඌව පළාත්වල ඇතැම් ස්ථානවලට සහ හමාබන්දොට්ටෙයි දිස්ත්‍රික්කයේ ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 100 දක්වා තද වැසි අපේක්ෂා කෙරේ.

තද සුළං සහ අකුණු අනතුරු සම්බන්ධයෙන් විමසිලිමත් වන ලෙස මහජනතාවගෙන් දන්වා සිටී.

இன்றைய வானிலை 2024.01.09

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.

வடக்கு, கிழக்கு, ஊவா,மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். அனுராதபுரம் மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் ஹமபாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்


காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை,பொத்துவில், ஹமபாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பொத்துவில் தொடக்கம் ஹமபாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் வடகிழக்கு அல்லது கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் பொத்துவில் தொடக்கம் ஹமபாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.