அராஜகமான முறையில் பிள்ளையான் கைது!!….. Pillaiyaan arrested in an illegal manner!!

N.M.Aslam(reported) Kinniya -sooragal

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பிலுள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து இன்றிரவு (08) 8.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளியை தள்ளிவிட்டு அவருடைய கையடக்க தொலைபேசியை பறித்து ஏழு பேர் கொண்ட குழுவினர் அராஜகமான முறையில் கைது செய்ப்பட்டுள்ளார்

ஆனாலும் நீதிமன்றத்தினால் பிடியாணை வழங்கப்பட்ட எவ்வித கடிதங்களும் காண்பிக்கப்படவில்லை எனவும் தாங்கள் கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் எனக் குறிப்பிட்டு சிவனேசத்துறை சந்திரகாந்தனை சிவில் உடையில் வந்து அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இருந்த போதிலும் கடந்த காலங்களில் புலனாய்வுத் துறையினர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் வாக்குமூலங்களை வழங்கி வந்துள்ளதாகவும் அவரது ஊடகப்பிரிவின் முக்கிய பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.