22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

பாணந்துறை கடலுக்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் மாயம் !

( Mohamed Nazar – Photo Journalist Suratha.lk )

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (16) மாலை 5.30 மணியளவில் பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், பாணந்துறை கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்த வேளையில், அங்கு நீராடிக்கொண்டிருந்த போது, ஏற்பட்ட பேரலையில் சிக்கி ஐந்து பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இந்த நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை கடலோர கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் இணைந்து மூன்று பேரை மீட்டனர், ஏனைய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

நீரில் மூழ்கி காணாமல் போனவர்கள் மொஹமட் இர்பான் மொஹமட் முஹம்மது என்ற 15 வயது சிறுவனும், பண்டாரகம, அட்டலுகம பகுதியைச் சேர்ந்த யாசிர் அரபாத் அகமது என்ற மாணவனும் ஆவர். அவர் இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

இந்நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போனவர்களின் சடலங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz