2025 අගෝස්තු මස 29 දිනය සඳහා කාලගුණ අනාවැකිය
2025 අගෝස්තු මස 28 දින ප.ව. 2.00 ට නිකුත්කරන ලදී.
බස්නාහිර, සබරගමුව සහ මධ්‍යම පළාත්වලත් ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවලත් වැසි වාර කිහිපයක් ඇතිවේ.
වයඹ පළාතේත් හම්බන්තොට දිස්ත්‍රික්කයේත් වැසි ස්වල්පයක් ඇතිවිය හැක.
මධ්‍යම කඳුකරයේ බටහිර බැවුම් ප්‍රදේශවලත් උතුරු, උතුරු-මැද, බස්නාහිර සහ වයඹ පළාත්වලත් ත්‍රිකුණාමලය සහ හම්බන්තොට දිස්ත්‍රික්කවලත් විටින් විට හමන පැ.කි.මී. (40-50) ක පමණ තද සුළං ඇතිවිය හැක.
තද සුළං වලින් සිදු වන අනතුරු අවම කර ගැනීමට අවශ්‍ය පියවර ගන්නා ලෙස ජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිනු ලැබේ.
දෘශ්‍ය ලෙස සූර්යයා දකුණට ගමන් කිරීමේදී, අගෝස්තු මස 28 වන දින සිට සැප්තැම්බර් 07 දක්වා ශ්‍රී ලංකාව ආසන්න අක්ෂාංශ වලට සෘජුවම ඉහලින් පවතී. හෙට දින (29) දහවල් 12:11 ට කුමුලමුනේ, පඩිනද්දම්පොරේ, ආලන්කුලම්, තන්නියුට්ටු, වෙට්ටප්පලෙයි, මුලතිව් ප්‍රදේශවලට හිරු මුදුන්ව පවතී.

2025 ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2025 ஓகஸ்ட் 28ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க நாளை (29ஆம் திகதி) நண்பகல் 12.11 அளவில் குமுழமுனை, பட்டிநத்தம்பொரே, ஆலங்குளம், தண்ணீரூற்று, வற்றாப்பளை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
WEATHER FORECAST FOR 29 August 2025
Issued at 2.00 p.m. on 28 August 2025
Several spells of showers will occur in the Western, Sabaragamuwa and Central provinces and in Galle and Matara districts.
A few showers may occur in the North-western province and in Hambantota district.
Strong winds of about (40-50) kmph can be expected at times over Western slopes of the central hills and in Northern, North-central, Western and North-western provinces and in Trincomalee and Hambantota districts.
The general public is kindly requested to take adequate precautions to minimize damages caused by strong winds.
The sun is going to be directly over the latitudes of Sri Lanka during 28th of August to 07th of September due to its apparent southward relative motion. The nearest places of Sri Lanka over which the sun is overhead tomorrow (29) are Kumulamunai, Padinaddampore, Alankulam, Thanniyuttu, Vettappalai, and Mullaitivu about 12.11 noon.