22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

‘Together We Rise’ பொதுக் காப்புறுதி மாநாடு 2025 இல் பலம் மற்றும் ஒற்றுமையைக்கௌரவித்த ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் நிறுவனம்

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் நிறுவனம் ‘வுழபநவாநச றுந சுளைந’ மாநாடு 2025 இல்
வெற்றியாளர்களைக் கொண்டாடியது
தேசத்தின் முதன்மையான பொதுக் காப்புறுதிதாரரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன்
ஜெனரல் லிமிடெட் (SLICGL) நிறுவனம் ‘Together We Rise’ என்ற தொனிப்பொருளில்
வருடாந்த பொதுக் காப்புறுதி மாநாடு 2025 ஐ நடத்தியது. பொதுக் காப்புறுதிப் பிரிவில்
சிறப்பாகச் செயற்பட்ட குழுக்கள் மற்றும் தனிநபர்களின் வெற்றியைக் கொண்டாடும் பிரதான
நிகழ்வாக இது அமைந்தது. திறமைகளை அங்கீகரித்தல், புதிய எண்ணங்களை ஊக்குவித்தல்
மற்றும் நிலையான அபிவிருத்தியைக் கொண்ட பயணம் என்பவற்றில் SLICGL நிறுவனம்
கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை மீள் உறுதிப்படுத்துவதாக இந்த நிகழ்வு அமைந்தது.
2026 ஜூன் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் உணவட்டுன அரலிய பீச் ரெசோர்ட் அன்ட் ஸ்பா
ஹோட்டலில் இடம்பெற்ற இரு நாள் வதிவிட மாநாடு, இலங்கையின் அனைத்துப்
பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த செயல்திறன் கொண்ட விற்பனை அதிகாரிகள்,
முகாமையாளர்கள் மற்றும் பெருநிறுவன விற்பனைப் பிரிவு வெற்றியாளர்களை ஒரே மேடையில்
ஒன்றிணைத்தது. சாதனைகளையும் வளர்ச்சியையும் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்த
மாநாடானது, தொழில்முறை திறன் மேம்பாடு மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய
தளமாக அமைந்ததுடன், மனிதவளத்தை மேம்படுத்தி, செயல்திறனை மையமாகக் கொண்ட
பண்பாட்டை வளர்க்கும் SLICGL நிறுவனத்தின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்தியது.
பொதுக் காப்புறுதி மாநாடு விற்பனைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான
கௌரவிப்புடன் ஆரம்பமானது. பொதுக் காப்புறுதி வர்த்தகத்தை நாடு முழுவதிலும்
மேம்படுத்துவதற்கும், வருமான இலக்கிற்கும் அப்பால் செல்வதற்கு வழங்கிய பங்களிப்பு இதன்
மூலம் அங்கீகரிக்கப்பட்டது.
வேலை மற்றும் வாழ்க்கையில் சமநிலையைப் பேணும் வகையில் குழுவினரின் ஆரோக்கியம்
மற்றும் நலனில் முதலீடு செய்யும் முயற்சியின் ஓர் அங்கமாக, முழுமையான நல்வாழ்வு, மன
அழுத்தத்திலிருந்தான முகாமைத்துவம் தொடர்பான விசேட அமர்வையும் நிறுவனம் ஏற்பாடு
செய்திருந்தது. இந்தச் செயலமர்வு அமர்வு, உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான நலனை
மேம்படுத்துவதற்கான நடைமுறைத் தந்திரங்களை வழங்கியதுடன், பணியிடத்தில்
உற்பத்தித்திறனை உயர்த்தவும், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவியது.
அதிகாரப்பூர்வ அமர்வுகளுக்கு இணையாக, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் குழு-
உருவாக்க செயற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இவை பங்கேற்பாளர்களுக்கு
மனஅழுத்தத்தை குறைத்து, ஒன்றுடன் ஒன்று தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும்,
பணியிடத்துக்கு அப்பால் உறவுகளை வலுப்படுத்தவும் வாய்ப்பாக அமைந்தன.
இந்த மாநாட்டில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய தொனிப்பொருள் இரவு நிகழ்வு கொண்டாட்டத்தை
மேலும் உயிர்ப்புடன் மாற்றியது. இலங்கையின் சிறந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மற்றும்
சிறப்பு விருந்தினர் கலைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற பிரமாண்டமான இரவு
பொழுதுபோக்கு நிகழ்ச்சி, விழாவிற்கு சிறப்பான நிறைவைக் கொடுத்தது.
3,000 இற்கும் மேற்பட்ட SLICGL விற்பனை வலையமைப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
முன்னணி 200 விற்பனை அதிகாரிகளின் சிறப்பான விற்பனை அளவு மற்றும் சேவைத் தரத்தில்

வழங்கிய சிறந்த செயல்திறனை இந்த நிகழ்வு அங்கீகரித்தது. மேலும், துறைமுக மற்றும் பிராந்திய
முகாமையாளர்களின் மூலோபாயத் தலைமையும் செயற்பாட்டு சிறப்பும் பாராட்டப்பட்டதுடன்,
தலைமையக மற்றும் நிறுவன வணிக பிரிவுகளில் உயர் செயல்திறன் கொண்ட பணியாளர்களின்
நிறுவன வளர்ச்சிக்கு வழங்கிய முக்கிய பங்களிப்பும் கௌரவிக்கப்பட்டது.
விற்பனை சிறப்பு, வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடு மற்றும் வணிக வளர்ச்சிக்கான
பங்களிப்பு போன்றவற்றுக்காக FBD channel ஐச் சேர்ந்த சந்தைப்படுத்தல் நிறைவேற்று
அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்டனர். அதேநேரம், Non-FBD channel ஐச் சேர்ந்த குழுவின்
உறுப்பினர்கள் வணிகம் பெறும் செயல்முறையை முன்னெடுத்தல், வாடிக்கையாளர் உறவுகளை
வலுப்படுத்துதல் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்தமைக்காக
அங்கீகரிக்கப்பட்டனர்.
பொதுக் காப்புறுதி மாநாடு 2025 ஆனது சாதனைகளைக் கொண்டாடி முன்னேற்றத்தை
ஊக்குவித்ததுடன், வாழ்க்கைகளை பாதுகாப்பதில், சமூகங்களுக்கு ஆதரவளிப்பதில் மற்றும்
இலங்கையின் காப்புறதித் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம்பிக்கைக்குரிய
கூட்டாளியாக SLICGL வகிக்கும் பங்கையும் சிறப்பித்தது.
SLICGL நிறுவனத்தின் தலைமைத்துவம் ‘Together We Rise’ என்ற தொனிப்பொளை
வலியுறுத்தியதுடன், இது நிறுவனத்தின் பகிரப்பட்ட வலிமை, நிலைப்புத் தன்மை மற்றும்
எதிர்காலத்திற்கான தெளிவான பார்வையை வெளிப்படுத்தியது. வெற்றியாளர்களைக்
கௌரவித்து அவர்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வதன் மூலம், நிறுவனத்தின் துறைசார்
முன்னணி நிலையைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் வகையில், ஊக்கமளிக்கப்பட்ட மற்றும்
அதிகாரமளிக்கப்பட்ட விற்பனைக் குழுவை உருவாக்குவதில் SLICGL நிறுவனம் தொடர்ந்து
செயல்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இரவு நிகழ்வானது கொண்டாட்டத்தை
உயிர்ப்புடன் மாற்றியது. இலங்கையின் சிறந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு
விருந்தினர் கலைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற பிரமாண்டமான பொழுதுபோக்கு இரவு,
விழா நிகழ்வுகளுக்கு சிறப்பான நிறைவைக் கொடுத்தது.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz