අදකාලගුණය 2024.08.31
බස්නාහිර, සබරගමුවසහවයඹපළාත්වලත්ගාල්ල, මාතර, මහනුවරසහනුවරඑළියදිස්ත්රික්කවලත්විටින්විටවැසිහෝගිගුරුම්සහිතවැසිඇතිවේ.බස්නාහිරසහසබරගමුවපළාත්වලත්ගාල්ල, මාතර, නුවරඑළියසහපුත්තලමදිස්ත්රික්කවලත්ඇතැම්ප්රදේශවලටමි.මී. 50 ටවැඩිතරමකතදවැසිඇතිවියහැක.
උතුරු, නැගෙනහිරසහඌවපළාත්වලසවස්කාලයේහෝරාත්රීකාලයේදීස්ථානස්වල්පයකවැසිහෝගිගුරුම්සහිතවැසිඇතිවියහැක.
මධ්යමකඳුකරයේබටහිරබැවුම්ප්රදේශවලසහඋතුරු, උතුරුමැදසහවයඹපළාත්වලත්, හම්බන්තොටසහත්රිකුණාමලයදිස්ත්රික්කවලත්විටින්විටහමනපැ.කි.මී. (40-50) කපමණතදසුළංඇතිවියහැක.
ගිගුරුම්සහිතවැසිසමගඇතිවියහැකිතාවකාලිකතදසුළංවලින්සහඅකුණුමඟින්සිදුවනඅනතුරුඅවමකරගැනීමටඅවශ්යපියවරගන්නාලෙසජනතාවගෙන්කාරුණිකවඉල්ලාසිටිනුලැබේ.
දෘශ්යලෙසසූර්යයාදකුණටගමන්කිරීමේදී, අගෝස්තුමස 28 වනදිනසිටසැප්තැම්බර්මස 06 දක්වාශ්රීලංකාවආසන්නඅක්ෂාංශවලටසෘජුවමඉහලින්පවතී. අදදින (31) දහවල් 12:10 ටරඹෑව, තෝපූර්සහමහවිලච්චියප්රදේශවලටහිරුමුදුන්වපවතී.
.இன்றைய வானிலை 2024.08.31
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் றம்வெவ, தோப்பூர் மற்றும் மஹாவிலச்சிய போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.
கடல் பிராந்தியங்களில்
**********
தாழ் அமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடா வின் வடக்கு மற்றும் மத்திய பகுதியுடன் இணைந்தாக காணப்படுகிறது.இது மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் வடமேற்கு மற்றும் மேற்குப் பகுதியின் மத்தியுடன் இணைந்ததாக காணப்படும். இதன் பின்னர் இந்த தாழ் அமுக்கமானது மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் ஆந்திரா பிரதேசத்தின் வட பகுதியுடனும் ஒடிசா கரையின் தென் பகுதியுடனும் இணைந்ததாக சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக் கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 70 - 80 km வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசுவதுடன் பலத்த மழையும் பெய்யக்கூடும்.இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
திருகோணமலை தொடக்கம் முல்லைத்தீவு , காங்கேசன்துறை மன்னார், புத்தளம் ஊடாக சிலாபம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 - 60 km இயலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள். ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 -2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.