අදකාලගුණය 2024.09.06
බස්නාහිර, සබරගමුව සහ වයඹ පළාත්වලත් මහනුවර, නුවරඑළිය, ගාල්ල සහ මාතර දිස්ත්රික්කවලත් වැසි වාර කිහිපයක් ඇතිවේ. ඌව පළාතේත් මඩකලපුව සහ අම්පාර දිස්ත්රික්කවලත් සවස් කාලයේ හෝ රාත්රී කාලයේදී ස්ථාන ස්වල්පයක වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇතිවිය හැක. මධ්යම කඳුකරයේ බටහිර බැවුම් ප්රදේශවල සහ උතුරු, උතුරු මැද සහ වයඹ පළාත්වලත්, හම්බන්තොට සහ ත්රිකුණාමලය දිස්ත්රික්කවලත් විටින් විට හමන පැ.කි.මී. (35-45) ක පමණ තද සුළං ඇතිවිය හැක.
ගිගුරුම්සහිතවැසිසමගඇතිවියහැකිතාවකාලිකතදසුළංවලින්සහඅකුණුමඟින්සිදුවනඅනතුරුඅවමකරගැනීමටඅවශ්යපියවරගන්නාලෙසජනතාවගෙන්කාරුණිකවඉල්ලාසිටිනුලැබේ.
දෘශ්යලෙසසූර්යයාදකුණටගමන්කිරීමේදී, අගෝස්තුමස 28 වනදිනසිටසැප්තැම්බර්මස 06 දක්වාශ්රීලංකාවආසන්නඅක්ෂාංශවලටසෘජුවමඉහලින්පවතී. අදදින (06) දහවල් 12:08 ටහික්කඩුව, වලස්මුල්ලසහහම්බන්තොටප්රදේශවලටහිරුමුදුන්වපවතී.
இன்றைய வானிலை 2024.09.05.06
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 35 - 45 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.08 மணியளவில் ஹிக்கடுவ,வலஸ்முல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.
கடல் பிராந்தியங்களில்
**********
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கிழக்கு கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 65 km இயலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள். ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.