(வானிலை ஆய்வுத் துறையின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.)

2026 நவம்பர் 17ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 நவம்பர் 16ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது, இன்று நவம்பர் 16 ஆம் திகதி காலை 08:30 மணிக்கு, திருகோணமலையிலிருந்து ஏறத்தாழ 645 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இத் தொகுதி தொடர்ந்தும் இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இன்று மாலையளவில் தெற்கு மற்றும் அண்மையாகவுள்ள மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு “புயலாக” (அக்வான்) வலுவடையக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. இத் தொகுதி நவம்பர் 17 ஆம் திகதியளவில் மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு “தீவிர சூறாவளிப் புயலாக” (அக்வான்) மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.