நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி குறித்த சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா இலங்கசிங்ஹ கூறுகையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டால் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார், என்ற போதும், நீர் கட்டண அதிகரிப்பு வீதம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.