22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி விபத்தில் பலி

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றுக்கு அருகாமையில் எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்ட காரணத்தினால் 10 வயதுடைய இந்த  சிறுமி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது தாயுடன் பயணித்த சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். எரிபொருள் தாங்கியில் மோட்டார் சைக்கிள் மோதுண்டதாகவும், இதன் போது சிறுமி வாகனத்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz