இஸ்ரேலில் வேலை தேடுவதற்கு உத்தேசித்துள்ள இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் போது மூன்று நிறுவனங்களின் பரிந்துரை நடைமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) உறுதிப்படுத்தியுள்ளது.
“இஸ்ரேலில் வேலை தேடும் சாத்தியமுள்ள பணியாளர்கள் வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் முக்கியமாக இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையத்திடம் (PIBA) அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எந்தவொரு விசா நடைமுறையையும் செயற்படுத்துவதற்கு இந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகளையும் அனுமதியையும் பெற வேண்டும்” என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.