மதுரங்குளியிலுள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி மதுரங்குளியிலுள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் இருந்து ஒரு கோடியே ஐந்து இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரம் ரூபா திருடப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி நேற்று (17) அனுராதபுரம் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 28/32 மற்றும் 35 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்களிடம் இருந்து தொண்ணூற்றிரண்டு இலட்சத்து எழுபத்தி ஏழாயிரம் ரூபா திருடப்பட்ட பணம் காணப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் வைப்பதில் ஈடுபடும் தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என தெரியவந்துள்ளது.