மாணவர் புத்தாக்க கண்காட்சி -2023

( SURATHA MEDIA BATTICALOA DISTRICT ELECTRATE COORDINATOR & REPORTER M.S.ZEYVITH WAFEE )

காத்தான்குடி கோட்ட கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் கோட்ட கல்வி பணிப்பாளர் AGM.ஹக்கீம்
(SLEAS)அவர்களின் தலைமையில் காத்தான்குடி பாடசாலை மாணவர்களின் புத்தாக்க கண்காட்சி இம்மாதம் 27,28 திகதிகளில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் SMM.அமீர் (SLEAS) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.மற்றும் இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக காத்தான்குடி நகரசபையின் செயலாளர் திருமதி.MRF.றிப்கா ஷபீன் (SLAS),காத்தான்குடி நகரசபையின் கணக்காளர் AS.மனாசிர் அஹ்ஸன்(SLACS),மற்றும் எமது கல்லூரியின் பழைய மாணவரும் அம்பாறை மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளருமான Dr.SDM.மாஹிர்(BVSc,Msc in Epidemiology) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கண்டுபிடிப்புகள் பற்றிய முழுமையான விளக்கம் அதிதிகளுக்கு அளிக்கப்பட்டதோடு மாணவர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *