கச்சதீவு அந்தோனியார் ஆலய உயர் திருவிழா 2024நடைபெறவுள்ளது

කච්චතිව් අන්තෝනියර් දේවාල උසස් උත්සවය 2024 පැවැත්වීමට නියමිතයි

( மன்னார் மாவட்ட சுரத பணிப்பாளர் ராயூகரன் )

மேற்படி விடயம் தொடர்பாக கச்சதீவு புனித அந்தோனியார்ல ஆலய உயர் திருவிழாவானது மாவட்டசெயலாளர் யாப்பாணம் அவர்களது ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம் யாழ்ப்பாணம் இலங்கை கடற்படை பிரதேச செயலகம் நெடுந்தீவு சம்பந்தப்பட்ட சகல திணைக்களகளினது முழுமையான ஒத்துழைப்புடன் 2024 02.23 மற்றும் 2024.02.24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் திருவிழா தொடர்பான கீழ் குறிப்பிடப்படும் பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் தங்களது பத்திரிகையில் செய்தியாக பிரசூரித்துதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளகிறேன்

2024.02.23 ஆம் திகதி காலை 5:00 மணி தொடக்கம் மு .ப 10:00மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் சேவையில் ஈடுபடும்

கச்சதீவுக்கான படகுசேவையானது குறிகட்டுவான் நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்கு தறையில் இருந்து 2024.02.23 ஆம் திகதி காலை 5:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை சேவையில் ஈடு படுத்தப்படும்

குறிகட்டுவான் நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்கு துறைகளில் இருந்து பயணிக்கும் ஒரு நபருகான படகிற்குரிய ஒரு வழிப்பயண கட்டணம் ரூ 1500 ஆகும்

வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்த படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்பு கொண்டு உரிய கடற்பயண பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் படகுகளில் பயணம் செய்பவர்கள் தனித்தனி படகாக பயணம் செய்யாது குழுவாக இணைந்து பாதுகாப்பான முறையில் பயணிப்பதுடன் 2024.02.23 ஆம் திகதி பி.ப 6:00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயங்களை ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

கச்சதீவு உச்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடி நீர் ஏற்ப்பாடுகளுடன் வருகை தருதல் வேண்டும்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தளமாகவுள்ளதால் மது பாவனைப்பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதாகும்்

சிவபாதசுந்தரம்
அரசாங்க அதிபர் மாவட்ட செயலர் யாழ் மாவட்டம்

தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மன்னார் மாவட்ட சுரத பணிப்பாளர் ராயூகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *