Today’s weather forecast

අද කාලගුණය 2024.11.26

නිරිත දිග බෙංගාල බොක්ක මුහුදු ප්‍රදේශය ආශ්‍රිතව පැවති පීඩන අවපාතය නොවැම්බර් මස 25 දින රාත්‍රී 1130 පමණ වනවිට මඩකලපුව සිට කී.මී. 29ක් සහ ත්‍රීකුණාමලයට කී.මී. 410 ක් පමන එපිටින් ගිණිකොන දෙසින් පිහිටා තිබුණි. එය ඉදිරි පැය 12 තුළදී වයඹ දෙසට ගමන් කර ගැඹුරු පීඩන අවපාතයක් දක්වා වර්ධනය වෙමින් දිවයිනේ නැගෙනහිර වෙරළට ඉතා ආසන්නව ගමන් කරනු ඇතැයි බලාපොරොත්තු වේ. මෙම පද්ධතියේ බලපෑම හේතුවෙන් දිවයින පුරා බොහෝ ප්‍රදේශවල අහස වලාකුළින් බරව පවතින අතර උතුරුනැගෙනහිර, ඌව සහ මධ්‍යම පළාත් වලට ඉතා තද වැසි සහ තද සුළං අපේක්ෂා කරයි.

දිවයිනේ බොහෝ ප්‍රදේශ වල විටින් විට වැසි හෝ ගිගුරුම් සහිත ඇති වේ. උතුරු, උතුරු-මැද, නැගෙනහිර, මධ්‍යම ,ඌව සහ දකුණු පළාත්වලත් පුත්තලම දිස්ත්‍රික්කයේත් ඇතැම් ස්ථානවලට මි.මී.200 ට වැඩි ඉතා තද වැසි ඇතිවිය හැක.

දිවයිනේ සෙසු ප්‍රදේශවලත් ඇතැම් ස්ථානවලට මි.මී.100 ට වැඩි තද වැසි ඇතිවිය හැක.

උතුරු, උතුරුමැද , මධ්‍යම සහ නැගෙනහිර පළාත්වලත් හම්බන්තොට දිස්ත්‍රික්කයෙත් විටින් විට හමන පැ.කි.මී. (40-50) ක පමණ තරමක තද සුළං ඇතිවිය හැක.

ගිගුරුම් සහිත වැසි සමග ඇතිවිය හැකි තාවකාලික තද සුළං වලින් සහ අකුණු මඟින් සිදු වන අනතුරු අවම කර ගැනීමට අවශ්‍ය පියවර ගන්නා ලෙස ජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිනු ලැබේ.

இன்றைய வானிலை 2024.11.26

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கம் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக சுமார் 290 km, திருகோணமலையில் இருந்து சுமார் 410 km தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து மிக சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமாக மாற்றமடைந்து நாட்டின் கிழக்குக் கரையை அண்மித்ததாக வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாழ் அமுக்கத்தின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காற்றுடன் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 mm இலும் கூடிய மிகப் பலத்த மழை பதிவாகலாம்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்


வங்காள விரிகுடாவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் காணப்படுவதனால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். இந்த காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 km ஆக அதிகரித்ததும் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
கலாநிதி மொஹமட் சாலிஹீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *