தூய்மை இலங்கை (Clean Srilanka) திட்டம் குறித்த ஊழியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில் திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் (17) இடம்பெற்றது.
இந்த செயலமர்வின்போது ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவிக்கையில்,
தூய்மை இலங்கை (Clean Srilanka) திட்டம் வெறும் குப்பைகளை சுத்தம் செய்வது மட்டுமல்ல, சுற்றுச்சூழல், சமூக மற்றும் மனப்பான்மை மேம்பாட்டை உள்ளடக்கிய ஒரு நீண்டகால திட்டமாகும். இத்திட்டத்தை சரிவர நாம் மட்டுமல்ல எமது நாட்டிலுள்ள அனைவரும் கடைப்பிடித்தால் மாத்திரமே அதில் வெற்றிகொள்ள முடியும். அதற்கான சகல செயற்திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுத்து வருகின்றார் என்றார்.
