அமரர் அந்தனி ஜீவா நினைவேந்தல் கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் இடம் பெற்றது

இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து அமரர் அந்தனி ஜீவா நினைவேந்தல்  நிகழ்வினை கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடத்தியது.பேராசிரியர் சபா ஜெயராசா  அவர்களின் தலைமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் புரவலர் ஹாஷிம் ஓமர் முன்னிலை வகித்தார்.

பிரதம அதிதியாக பௌத்த சாசன, மத மற்றும் கலச்சார அமைச்சர் பேராசிரியர். ஹினிதும சுனில் செனவி கலந்து கொண்டு அந்தனி ஜீவா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.

அதனை அடுத்து அங்கு உரையாற்றிய அமைச்சர் –

இலங்கையின் எழுத்து துறைக்கும் இலக்கிய துறைக்கும் அமரர் அந்தனி ஜீவா  ஆற்றிய பங்கு மகத்தானது. அரசியல் கட்சி ரீதியாக அவர் எம்முடன் பயணித்தாலும் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்ட ஒருவர்

எனவே இவர் இலக்கிய உலகுக்கு விட்டு சென்றதை நாம் அனைவரும் ஒன்றுபட்டு முன்னெடுப்பது அவருக்கு செய்யும் கைங்கரியமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

பிரதம அதிதியாக பௌத்த சாசன, மத மற்றும் கலச்சார அமைச்சர் பேராசிரியர். ஹினிதும சுனில் செனவி கலந்து கொண்டு அந்தனி ஜீவா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *