22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

கிண்ணியா பிரதேச செயலக தொழிற்சந்தை – 2025

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் 2025 ஆம் ஆண்டுக்கான கிண்ணியா பிரதேச தொழிற்சந்தை நேற்று (11) கிண்ணியா பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக கிண்ணியா பிரதேச செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் தொழில் வழங்குனர்களாக தனியார் நிறுவனமும் உள்ளூர் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் பல தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிண்ணியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்,மாவட்ட மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெசினா பஹ்மி, பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் பஹிமா பேகம், மற்றும் ஏனைய பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz