ஹாசிம் உமர் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பு சங்கரிலால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம் பெற்றது
ஊடகத்துறை சார்ந்தவர்கள் மேற்படி இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் ஜெய வீர, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் முதல் செயலாளர் நவ்யா சிங், உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களின் செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் என பலரும் சமூகமளித்திருந்தனர்.
ஹாசிம் உமர் நற்பணி மன்றம் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இவ்வாறான நோன்பு திறக்கும் விசேட நிகழ்வை நடத்தி வருகின்றது.
நேற்றைய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் விசேட அம்சமாக அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு அட்டையில் பொறிக்கப்பட்டிருந்த இலக்கத்தின் அடிப்படையில் குளுக்கள் முறையிலான அன்பளிப்புகளும் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



