சர்வ தேச நாடக தினத்தை முன்னிட்டு “கண்ணகி கலாலயத்தின்” இரு கலைப்படைப்புக்கள்.

( Mohamed Nazar – Photo Journalist Suratha.lk )

முழு நீள நகைச்சுவை திரைப்படமொன்றை உருவாகக்குவதற்கு “கண்ணகி கலாலயம்” முழு முயற்சியை மேற்கொண்டுள்ளது. பல்துறைக் கலைஞர். ஏ.கே. இளங்கோவின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பிலும் கலை சேவகன் எஸ்.முத்துக்குமாரின் தயாரிப்பிலும்.
கலைஞர்கள் ஆ. சுரேஷ், ரியாஸ், எஸ். முத்துக்குமார், ஹர்ஷ தேஜன, கமல ஸ்ரீ மோகன்குமார், சித்ரா கௌரி, சாமிளா நிசார், அஸிஸ் லஹான, ஆர்.எஸ்.மனோகரன், எஸ்.பிரசாத் எம்.எப்.எம்.நசார், ரிஸ்மினா ரபீக், கவிதா இளங்கோ, இன்னும் பல கலைஞர்களுடன் குழந்தை நட்சத்திரங்கள், இ.கலைநிலா, இ.தமிழ்பிரியன் இவர்களுடன் இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து திரைப்படத்தில் கலக்க உள்ளனர். ஒளிப்பதிவை பெருமாள் பிரவீன்குமார் மேற்கொள்ள, நடன இயக்குனராக ஸ்டெல்லா செல்வி பணியாற்றவுள்ளார். உதவி இயக்குனர்களாக லீசா, மற்றும் வினோத் இவர்களுடன் ராமர் திவேக்கும் பணியாற்றுகிறார்.. “வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்ற மருந்துடன் முற்று முழுதாக நகைச்சுவை விருந்து படைக்க “சகலகலா கில்லாடிகள்” திரைப்படம் நேற்று (27)ஆம் திகதி சர்வதேச நாடக தினத்தை முன்னிட்டு ஆரம்ப பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டன
அத்தோடு மேடை நாடக கலையை மென்மேலும் வளப்படுத்தும் நோக்குடன் இலங்கையின் சிரேஷ்ட கலைஞரும் ஆசிரியருமான சற்குருநாதனின் தயாரிப்பிலும் நடிப்பிலும் “பூ(மே)லோகமும் சமூக மேடை நாடகத்துக்கான ஆரம்ப பூஜையும் இதே நிகழ்வில் இடம் பெற்றது. இதற்கான கதை, வசனம், நெறியாள்கையையும் பல்துறை கலைஞர் ஏ. கே. இளங்கோ மேற்கொள்கிறார், (mdv)மிஷன் டி விஷன் புகைப்படக் கலைஞர்களும் பலர் விழாவில் கலந்து கொண்டனர், திரு. ஓவியநாதன், கவிமோகன், கட்டார் ராஜு, எமது நண்பர்(பு.அ.க.வட்டம் தலைவர்) கலைஞர் சம்மு சம்மு அவர்களும், எழுத்தாளர் இயக்குனர் திரு .மொழிவாணன் அவர்களோடு இன்னும் பல கலைஞர்கள் இவ் பூஜையில் கலந்து கொண்டனர் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *