நாளை வானில் தோன்றவுள்ள PINK MOON..! ஆனால் பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது..!

( SURATHA NEWS READER 🇱🇰 – SINNALEBBAY SAHANA – KINNIYA MAHAMAR )

இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் ‘இளஞ்சிவப்பு நிலவு’ (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் மிகச்சிறிய முழு நிலவாக இது இருக்கும். ஏனெனில் சந்திரன் பூமியிலிருந்து அதன் மிகத் தொலைவான புள்ளியான அபோஜியில் இருக்கும். எனவே இதை MICRO MOON என்றும் அழைக்கின்றனர்.

வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவு என்பதால் பிங்க் நிலா எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது.

வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் பூக்கும் காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூ “மோஸ் பிங்க்” என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூக்கள் வசந்தத்தின் துவக்கத்தைக் குறிக்கின்றன. இதன் பின்னணியிலேயே PINK MOON என்று பெயர் வந்தது.

இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் இந்த அழகிய முழு நிலவை காண முடியும்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிழக்கு வானில் உதயமாகும்போது, “சந்திர மாயை” காரணமாக சந்திரன் பெரிதாகவும், வளிமண்டல நிலைகளால் ஆரஞ்சு நிறத்திலும் தோன்றலாம்.

ஒளி மாசு குறைவாக உள்ள இடங்களான கிராமப்புறங்கள், மலை உச்சிகள் அல்லது திறந்தவெளிகளில் இருந்து பார்ப்பது சிறந்த அனுபவத்தை அளிக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *