( N.M.Aslam – Suratha News )
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் மது போதையில் நாயுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலரின்றி இன்று (15) உயிரிழந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி மது போதையில் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து நாயுடன் மோதிய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.