22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி 15 வயது சிறுவன்

( ABDUL AZEEZ )

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நேற்று(28) மாலை நன்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் (15வயது) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட 5 பேர் நண்பர்கள் கடலில் நீராடச் சென்றுள்ளனர்.

சடலம் இன்று மாலை 7.00 மணியளவில் களுவன்கேணி கடலில் மிதப்பதை அவதானித்த மீனவர்கள் – கரைக்கு எடுத்து வந்ததுடன் , சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் – திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதந் பிறகு சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தகவல் ஏறாவூர் அப்துல் அஸீஸ் சுரத மீடியா

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz