2 நாட்களில் 10 பேர் மாயம்

( NEWS READING REPORTER AKM.MUKSITH KINNIYA )

நாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்த 2 வயதுச் சிறுமியும், கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியொருவரும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வரக்காபொலையைச் சேர்ந்த 26 வயதான நபரும், மொரட்டுவையைச் சேர்ந்த 57 வயதான பெண்ணும், முல்லேரியாவைச் சேர்ந்த 67 வயதுடைய நபரும், தம்பகல்லையைச் சேர்ந்த ஒருவரும், காரைத்தீவைச் சேர்ந்த 53 வயதான நபரும், வவுணதீவைச் சேர்ந்த 42 வயதான நபரும், மெதகமவைச் சேர்ந்த 40 வயதான நபரும் இவ்வாறு காணமற் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படடுள்ளின்றது.

இந்நிலையில் குறித்த நபர்கைளைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NEWS READING REPORTER
AKM.MUKSITH
KINNIYA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *