கவிதாயினி வசந்தகுமாரி எழுதிய “தவங்களெல்லாம் வரங்களாவதில்லை”


நூல் வெளியீடு நேற்று 20. 01. 2024) கொழும்பு
J.R.JAYAWARDANE மண்டபத்தில் சக்தி T.V. சிரேஷ்ட ஊடகவியலாளர் கஜமுகன் தலைமையில் மிகக் கோலாகலமாக நடை பெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் கெளரவ அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்து நிகழ்வினை அலங்கரித்தார்.
இதன் போது சிந்தை தந்த சிந்தனையாளன் SUNSHINE SUPER STAR இலங்கை பொன்மனச் செம்மல் கலைத் தங்கம் கவிஞர் M.S.தாஜ்மஹான் நூலின் முதல் பிரதியை அமைச்சரிமிருந்து பெற்றுக் கொண்டது கண் கொள்ளாக் காட்சியாகக் காணப்பட்டது.
அமைச்சரின் உரையிலே முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட தாஜ்மஹான்
அவர்களே என விளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. கெவரவ அதியாக
வீரகேசரி பத்திரிகை ஆசிரியர் நண்பர் ஸ்ரீ கஜன் ஐயா உட்பட
சிறப்பு அதிதிகளாக
ஜனாதிபதி இணைப்பாளர் சுப்பையா ஆனந்தக்குமார்,கொழும்பு மாவட்ட பிரதி மேயர் .M.T.M.இக்பால்
ஹாஹியார் ஆகியோர் கலந்து நிகழ்வுக்குப் பெருமை சேர்த்தனர்.
விஷேட அதிதிகளாக
வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கவிமாமணி நஜ்முல் ஹுசைன், உணர்ச்சிப் பூக்கள் கவிஞர் ஆதில்
கீத்ராத் புகழ் ஈழத்து இசை முரசு கலைக்கமல், பிரபல ஊடகவியலாளர் நசார், அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தலைவர் Dr.
ANBALAGAN, பிரபல பாடகி அருணா போன்ற
மண்டபம் நிறைந்த இலக்கிய வாதிகளும்,
கலை அபிமானிகளும் கலந்து நிகழ்வினைச் சிறப்பித்தனர்.மற்றும்
நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக
பிரபல இளங்கோ அமைப்பின் தலைவர்
கலைஞர் இளங்கோ அவர்களின் ஏற்பாட்டில்
சின்னஞ்சிறு நடன நாட்டிகைகளின் நடனத்துடன் நிகழ்ச்சி
ஆரம்பிக்கப் பட்டது,
வந்திருந்த அனைவரது உள்ளங்களையும் ஈர்த்தது.
விஷேடடமாக இந்த நிகழ்வினை நெறிப் படுத்திய இலங்கை நெய்னார் காப்பகத் தலைவர் இனிய நண்பர் இம்ரான் நெய்னார் அவர்கள் பாராட்டுக்குரியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *