22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

கனடாவில் ஸ்டெரப் பக்ரீறியா தாக்கம்: ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு

( காளிமுத்து சத்தியசீலன் செட்டிகுளம் )

கனடாவில் சிறுவர்களை அதிகளவில் பாதிக்கும் ஸ்டெரப் எனப்படும் பக்ரீறியா நோய்த் தொற்று குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த பக்ரீறியா தாக்கம் அதிகரித்துள்ளது. குறித்த பக்ரீறியா தாக்கத்தினால் இதுவரையில் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்கத்தினால் பத்து வயதுக்கும் குறைந்த சிறுவர்களே மரணித்துள்ளனர்.

இந்த பக்ரீறியா தாக்கத்தினால் தொண்டை அழற்சி அதிகளவில் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் இந்த பக்ரீறியா தாக்கத்தினால் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்றாரியோ மாகாண பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. நோய் அறிகுறிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.

ஒன்றாரியோ மாகாணம் மட்டுமன்றி நாடு முழுவதிலும் இந்த பக்ரீறியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz