22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

Today’s weather forecast

අද කාලගුණය 2024.01.27

උතුරු, නැගෙනහිර, උතුරුමැද සහ ඌව පළාත්වල බොහෝ ස්ථාන වලට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක. නැගෙනහිර, උතුරු මැද, වයඹ, මධ්‍යම සහ ඌව පළාත්වල විටින් විට පැයට කිලෝමීටර් 40 ක පමණ තද සුළං ඇති විය හැක. නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ සමහර ප්‍රදේශවල උදෑසන කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් දක්නට ලැබේ. මධ්‍යම, සබරගමුව සහ බස්නාහිර පළාත්වල මෙන්ම ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවල බොහෝ ස්ථානවල සවස 2 න් පසු වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

இன்றைய வானிலை 2024.01.27

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

நுவரேலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

கடல் பிராந்தியங்களில்


திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹமபாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம்,காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹமபாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz