கணவனை இழந்த 100 விதவைகளுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

SL. ABDUL AZEEZ, ERAVUR (Surtha Media Reporter)

සැමියන් අහිමි වූ වැන්දඹුවන් 100කට වියළි ආහාර ඇසුරුම් බෙදාදීම

நாடளாவிய ரீதியில் பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுக்கும் அஸீஸா பௌண்டேசன் அனுசரணையில் கசன் மௌலவி நட்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அல்ஹாஜ் சாதிக் ஹசன் அவர்களினாலும் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் MS.சுபைர் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க! ஏறாவூர் சாலிஹீன் பள்ளியில் வைத்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த 100விதவைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று சனிக்கிழமை 03.02.2024 காலை 10.00 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு அஸீஸா பௌண்டேசன் அதன் தலைவருக்கு பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் Ms.அபுல்ஹசன் (ஓய்வுபெற்ற அதிபர்), Am.முபாஸ்தீன் (மட்டக்களப்பு மத்தி உதவி கல்வி பணிப்பாளர் ), Am.றிபாய் மௌலவி (சாலிஹீன் பள்ளி இமாம்), அல்ஹாஜ் கபூர்தீன் ஹாஜியார் (முன்னாள் நகர சபை உறுப்பினர் ),Msm றியால் (முன்னாள் நகர சபை உறுப்பினர் ), கபீர் (அ.இ.ம.காங்ரஸ்)
ஆகியோரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. தகவல் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *