22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

சிறந்த தொழில் முயற்சியாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பைகள் வழங்குதல்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து Unilever ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் நடாத்தப்படும் சௌபாக்ய திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Unilever நிறுவனம் இத்திட்டத்தை ஆரம்பித்து 22 வருடங்கள் கடந்துள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பெண் தொழில்முனைவோரின் பிள்ளைகளை இதன் பயனாக தெரிவு செய்து அவர்களுக்கு பாடசாலைப் பைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் Unilever நிறுவனத்தின் சுபீட்ச திட்ட முகாமையாளர், பிராந்திய சந்தைப்படுத்தல் முகாமையாளர், பிராந்திய செயற்பாட்டு முகாமையாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Suratha Media Unit
Trincomlaee

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz