22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்து: අනුරාධපුරයේ අනතුරක්:

( News ReaderSinnalebbay Sahana )

அநுராதபுரம் ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது. 
குறித்த விபத்து, நேற்றையதினம்(02.04.2025) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி ஒன்றில் முன்னால் இருந்து பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லொறி மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது, அவரது ஒரு காலை அகற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் குறித்த விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz