22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கான முன்னாயுத்த கலந்துரையாடல்.

( A. R. Mohemad Saheeth – suratha.lk Journalist )

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கான முன்னாயுத்த கலந்துரையாடல்.

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கான முன்னாயுத்த கலந்துரையாடலானது இன்று (21) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ. ஜிம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலின் போது பிரதேச செயலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் மற்றும் பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்

 

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz