22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

தொடர்பான அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமானது

( A. R. Mohemad Saheeth – suratha.lk Journalist )

கலந்துரையாடல் மூலம் பிணக்குகளை தீர்த்துக்கொள்ளப் பயன்படும் மத்தியஸ்தமுறை தொடர்பான அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமானது நேற்று (22) மூதூர் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது மூதூர் பிரதேச செயலாளர் எம்.வீ.எம்.முபாறக் அவர்களின் தலைமையில் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப்.ரொசானா அவர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலக மத்தியஸ்த உத்தியோகத்தர்களான என்.எப்.நஸ்ரின் ஏ.எஸ்.எம்.நிஜாம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இதன்போது வளவாளர்களாக மாவட்ட செயலக மத்தியஸ்த உத்தியோகத்தர் திருமதி.பு.பவானி, தம்பலகாமம் பிரதேச செயலக மத்தியஸ்த உத்தியோகத்தர் திருமதி.ஆர்.ரஹீமா பானு, பட்டினமும் சூழழும் பிரதேச செயலக மத்தியஸ்த உத்தியோகத்தர் திருமதி.றிள்வான் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz