22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டம் – 09 பேர் கைது.

( SMM.Risathkhan – Kinniya )

சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டம் – 09 பேர் கைது
சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் உட்பட ஒன்பது (09) பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்றைய தினம் கொழும்பில் உள்ள வைத்தியசாலை சதுக்கத்திலும் சுகாதார அமைச்சுக்கு அருகிலும் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று நண்பகல் 12.00 மணி முதல் நாளை மாலை 05.00 மணி வரை வைத்தியசாலைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் போராட்டக்காரர்கள் மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz