( Trincomalee Assistant director – Thamil priya Lingeshwaran )
கிண்ணியா காக்காமுனை அல் கிதாயா முன் பள்ளி மாணவர்களின் பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு நிகழ்வு அந்த முன் பள்ளி வளாகத்தில் இன்று (23/01/2023)ம் திகதி பி.ப 2:30 மணியளவில் அம் முன்பள்ளி ஆசிரியை திருமதி முனவ்ரா தலைமையில் வெகுசிறப்பாக ஆரம்பமானது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கிண்ணியா நகர சபை முன்னாள் நகரபிதா வைத்தியர் சட்டத்தரணி ஹில்மி மஃருப் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக பிராந்திய முன்பள்ளி உத்தியோகத்தர் திரு நவாஸ்தீன், மயில் தீவு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் முன்னவர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வினை சுரத ஊடக அனுசரணையுடன் சுரத தமிழ் பிரிவு பிரதி பணிப்பாளர் திரு க.மு.முஸாபீர் அவர்கள் தொகுத்து வழங்க முன்பள்ளி மாணவர்களின் கலை பரிசளிப்பு நிகழ்வுகளை தொடர்ந்து பிரதம அதிதி உரையாற்றினார் அதில் தான் இன்னும் மேன்மேலும் இந்த முன்பள்ளிக்கு பல உதவிகளை செய்து தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.