22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒருவர் மரணம்.

( HM Faheer, News Reporter, Kinniya )

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா பகுதியில் யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (14) இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வவுனியா பட்டாணி சு புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த முபாரக் நிப்ராஸ் (28 வயது) உயிரிழந்துள்ளதாகவும் அவரது சக நண்பரான சயான் (22 வயது) என்பவர் காயமடைந்த நிலையில் திருகோண மலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை திருகோணமலை பொது வைத்த சாலை பிரேத அறையில் குளிரூட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் சடலத்தை பிரேத அறையில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மூதூர் அல்லது கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz