22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

2025 பிரதேச சபை தேர்தல் அட்டாளைச்சேனை பிரதேச மகளிருக்கான கூட்டம்.

( Asm.Arham Kalmunai ) 

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான மகளிர்க்கான விசேட கூட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் அல்-முனிரா வட்டாரம் வேட்பாளர் றியா மசூர் அவர்களை ஆதரித்து அட்டாளைச்சேனை 6ம் பிரிவு பட்டியல் வேட்பாளர் நஸ்மியா ரசீன் தலைமையில் இன்று (17) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உச்சபீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.சி.சமால்தீன், மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச மகளிர்களும் கலந்து கொண்டனர்.

 

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz