22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

இலங்கையில் கல்விச் சபையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கை தொடர்பாகப் பொதுமக்களின் கருத்துகளைக் கோருதல்

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பரிந்துரைக்கமைய ‘கல்விச் சபை’ ஒன்றினை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தக் கல்விச் சபையானது நான்கு பிரதான துறைகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளதுடன், சட்ட விவகாரங்கள், தர உறுதிப்படுத்தல், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அங்கீகாரம் மற்றும் கல்விசார் நிபுணர்களுக்குச் சான்றளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக்குழுவின் அறிக்கை தற்போது கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://moe.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, கல்விச் சபையை நிறுவுவதற்கான பாராளுமன்றத் துணைக்குழுவின் தலைவர் மஹிந்த ஜயசிங்கவின் ஆலோசனையின் பேரில், தற்போது பொதுமக்களின் கருத்துகளைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தமது கருத்துகளை 2026 மே 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகப் பின்வரும் தபால் முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கின்றது.

தபால் முகவரி-
மேலதிக செயலாளர் (நிறுவனங்கள்),
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு,
இசுருபாய, பெலவத்த, பத்தரமுல்ல.

மின்னஞ்சல்: teacherest@gov.lk
தொலைநகல் (Fax) 0112784819

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz